Ads 468x60px

Pages

Wednesday, August 10, 2011

ஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ ! ! !

இப்பொழுது கணினி என்பது இந்த உலகில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது நாம் எங்கு திரும்பினாலும் சரி நமக்கு முன் கணினி தான் நிற்கிறது. அந்த அளவுக்கு இந்த உலகம் கணினியை நேசிக்கின்றது. கணினி இயங்குவதற்கு மென்பொருள் மிகவும் அவசியமான ஒன்று . இப்பொழுது மென்பொருள்கள் ஏராளமாக உருவாக்க படுகின்றன. இணையத்தில் ஒரு குறிச்சொல் கொடுத்து தேடினால் ஏராளமான மென்பொருள்கள் குவிகின்றன ஒரே செயலுக்கு பல வகையான மென்பொருள்கள் வந்துவிட்டன.


நாம் நம் கணினிக்கு தேவையான ஒவ்வொரு மென்பொருளையும் இணையத்தில் தேடி தேடி நிறுவிக்கொண்டு இருக்கிறோம்.ஒவ்வொரு மென்பொருளையும் பதிவிறக்குவதர்க்கு ஒவ்வொரு வலை பக்கத்திற்கு செல்லுவோம் அதில் அதை பதிவிறக்கியும் கொள்ளுவோம்.

இதனால் நாம் அதிகமான நேரத்தை இணையத்தில் செலவிட வேண்டியுள்ளது.


அதற்கான் தீர்வை ஒரு இணயதளம் நமக்கு தருகிறது . ஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து வகையான மென்பொருளையும் நிறுவுவதற்கு இந்த தளம் உதவுகிறது. இந்த தளம் கணினிக்கு தேவையான மென்பொருள்களை ஒரு பட்டியலே போட்டு வைத்திருக்கிறது.


இந்த தளத்தில் கணினிக்கு மிகவும் அவசியமான VLC , WINAMP  , JET AUDIO போன்ற வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர்களும் , FIREFOX,CHROME போன்ற பல உலாவிகளும் ,  GTALK , SKYPE போன்ற உரையாடல் மென்பொருள்களும்  மற்றும் இணையத்திற்கு தேவையான பிளாஷ் பிளேயர் , சில்வர் லைட் போன்ற மென்பொருள்களும் இந்த தளத்தில் இருக்கிறது. மேலும் இந்த தளத்தில் ஆவணகளுக்கு தேவையான மென்பொருள்களும் ஒளிபடங்களுக்கு தேவையான மென்பொருள்களும் நிறைய உள்ளது.







இந்த தளத்திற்கு செல்ல : WWW.NINITE.COM


நீங்கள் செய்ய வேண்டியது :

1. மேலே உள்ள தளத்திற்கு செல்லவும்.

2. பின்னர் அதில் உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்வு செய்யுங்கள் .

3. பிறகு கீழே உள்ள GET INSTALLER என்ற பொத்தானை அழுத்தவும்.

நீங்கள் அந்த பொத்தானை அழுத்திய உடன் அந்த தளம் ஒரு சாதாரண NINITE.EXE கோப்பை பதிவிறக்கம் செய்யும். அந்த கோப்பை பதிவிறக்கிக் கொண்டு அதை திறக்கவும். அவ்வளவு தான் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் ஒரே சொடுக்கில் நிறுவப் பட்டுவிடும் .



இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் அனைவரும் பயனடைவார்கள் ! ! !


Tuesday, August 9, 2011

வலைஉலாவி மூலம் கோப்புகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்

கோப்புகளை பகிர்வது என்பது இணயத்தில் அவசியமான ஒன்று. நாம் அனைவரும் இணையத்தில் உலாவும் போது பல வகையான கோப்புகளை பார்வையிடுகிறோம் மற்றும் அதை பதிவிறக்கியும் கொள்கிறோம். அந்த கோப்புகளை நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறோம் ஆனால் இல்லா நேரங்களில் நம் நண்பர்கள் நம்முடன் இருப்பதில்லை அந்த சமயங்களில் அவர்கள் ஒரு கோப்பை கேட்டு நம்மை அணுகும் போது நாம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக கோப்புகளை பகிர்ந்து கொள்கிறோம் . சில கோப்புகளின் அளவு மிகவும் பெரியதாக இருக்கும் அவற்றை நாம் மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துகொள்ள இயலாது.


அந்த மாதிரியான தருணங்களில் நாம் கோப்புகளை பதிவேற்றம் செய்து அதன் முகவரியை நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் அவர்கள் அந்த கோப்புகளை அவர்கள் பதிவிறக்கலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு உள்ள கோப்புகளை மட்டும் தான் நாம் பதிவேற்ற இயலும் அதன் அளவு மீறிவிட்டால் நாம் அதை பதிவேற்ற இயலாது .


ஆனால் நாம் சில கோப்புகளை மிகவும் பத்திரபடுத்தி வைத்திருப்போம் அவற்றை நாம் பதிவேற்றம் செய்வதால் அவற்றை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கி கொள்ளலாம் இவ்வாறு நிறைய பிரச்சனைகள் கோப்புகளை பகிரும்போது நமக்கு ஏற்படும் .


இதற்கு ஒரு அழகான தீர்வை ஒரு இணையதளம் கொண்டுவந்துள்ளது . இதன் மூலம் நாம் பெரிய கோப்புகளை மிக எளிதாக நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

இதை தளத்திற்கு செல்ல : www.filesovermiles.com

இந்த தளம் நேரடியாக கோப்புகளை பகிர்ந்துகொள்ள நமக்கு வழி வகுக்கிறது . இணையம் மூலம் கோப்புகளை வேகமாகவும் , பாதுகாப்பாகவும் பகிர்ந்துகொள்ள இந்த தளம் நமக்கு உதவியாக இருக்கும். மேலும் கோப்புகளை பகிர்வதற்கு நாம் இதில் எந்த கணக்கும் உருவாக்க தேவையில்லை அதுப்போல எந்த மென்பொருளையும் பதிவிறக்கவும் தேவையில்லை.

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் இதில் நம் கோப்புகள் எங்கும் சேமிக்கப் படாது.

இதனை பயன்படுத்த :

1. மேலே உள்ள சுட்டியை அழுத்தி அந்த தளத்திற்கு செல்லவும்.

2. அதில் BROWSE பொத்தானை அழுத்தி எந்த கோப்பை பகிர வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள் .

3. பின்னர் இத தளம் ஒரு முகவரியை ( URL ) கொடுக்கும் அதனை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் உங்கள் நண்பர் இதனை பதிவிறக்கி கொள்ளலாம். உங்கள் கோப்புகள் எங்கும் சேமிக்க படமாட்டாது .

மேலும் இதில் நீங்கள் உங்கள் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். அந்த கடவுச்சொல் உங்கள் நண்பருக்கு தெரிந்தால் மட்டுமே பதிவிறக்க இயலும்.





குறிப்பு : 
உங்கள் நண்பர்கள் கோப்புகளை பதிவிறக்கும் வரை நீங்கள் உங்கள் உலாவியை மூடக் கூடாது. நீங்கள் உங்கள் உலாவியை மூடி விட்டால் உங்கள் நண்பர் கோப்பை பதிவிறக்க இயலாது .




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !



Monday, August 8, 2011

ஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி - டாக் இயக்க

இணையத்தின் ஜாம்பவானாக இருப்பது கூகிள் தான் அந்த அளவுக்கு இணையத்தில் எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் சேவை நமக்கு பயனளிக்கிறது. இப்பொழுது இது வெளியிட்டு உள்ள கூகிள் + சேவை இணையத்தில் பல சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறது. அதைப்போல் இந்த நிறுவனத்தின் ஜி-டாக் சேவை பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது. இந்த மென்பொருளானது ஜி மெயில் இடைமுகம் மூலம் நாம் ஜி-மெயில் பயனர்களிடம் அரட்டையடிக்க உதவுகிறது.


நம்மில் பலர் இந்த மென்பொருளை உபயோக படுத்துகிறோம். நம் வீட்டில் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். நம் வீட்டில் வேறு யாராவது இதனை பயன்படுத்தி கொண்டு இருந்தால் நாம் நமக்கு வரும் மின்னஞ்சல்களை நாம் கண்டு அறிய இயலாது இதனால் நாம் உடனடியாக பதில் அனுப்பவேண்டிய மின்னஞ்சல்களுக்கு தாமதமாக அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரலாம்.

இதற்காக ஒரு சிறிய நுணுக்கம் இதன் மூலம் நாம் ஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி-டாக்கை திறக்கலாம். இதற்க்கு எந்த விதமான மென்பொருளும் அவசியம் இல்லை.

இதோஅதற்க்கான நுணுக்கம் :

1. முதலில் START--> ALL PROGRAMS-->GTALK -க்கு செல்லவும்

2. பின்னர் G-TALK-ஐ வலது கிளிக் செய்து PROPERTIES என்பதை தேர்வு செய்யவும் .

3.அதில் TARGET என்ற சொற்பெட்டியில் C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu என்று இருக்கும் அதில் startmenu என்பதை நீக்கிவிட்டு nomutex என்று தட்டாசு செய்து விட்டு OK பொத்தானை அழுத்தவும்.






அவ்வளவு தான் ஜி-டாக்கை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதை நீங்கள் எவ்வளவு முறை வேண்டுமானாலும் திறக்கலாம்.இதனை திறக்க START-->ALL PROGRAMS--> GTALK என்பதை சொடுக்குங்கள்.  உங்கள் வீட்டில் உள்ள இல்லா நபர்களுக்கும் ஒரு ஜி-டாக் திறந்து கொள்ளலாம்.




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !