Ads 468x60px

Pages

Saturday, August 13, 2011

பதிவிறக்கம் சுட்டிகளை தேட உதவும் தேடுபொறிகள்

இணையத்தில் தேடு பொறி என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதன் மூலம் நாம் இணையத்தில் குவிந்து இருக்கும் தகவல்களை மிகவும் எளிதாக தேடலாம். இணைய உலகில் சாதனை படைத்து கொண்டிருக்கும் கூகிள் புகழ் பெற முக்கியமான காரணம் அதன் தேடுபொறி தான் இது அனைவரும் அறிந்ததே. நாம் இதில் பல வகையான தளங்களை தேடலாம் ஆனால் ஒரு கோப்புடைய பதிவிறக்கம் சுட்டியினை தேடுவது சற்றே சிரமமானது. நாம் ஒரு கோப்பின் பதிவிறக்க சுட்டியினை மட்டும் தேட சில இணையதளங்கள் நமக்கு வழிவகுக்கிறது. அந்த இணையதளங்களை பற்றி நாம் பார்ப்போம்.

இதோ அதற்க்கான சில தளங்கள் :

தளங்களுக்கு செல்ல அதன் கீழே உள்ள படங்களை சொடுக்குங்கள் 

5. SHARE DIGGER : 

இந்த தளத்தில் நாம் நமக்கு தேவையான கோப்புகளை குறிப்பிட்ட சேமிப்பு தளத்தில் இருந்து மட்டும் தேடலாம். இந்த தளமானது கூகுளை பயன்படுத்தி தேடுகிறது.





4. JET DL  :

இந்த தளத்திலும் நாம் குறிப்பிட்ட சேமிப்பு தளத்தில் மட்டும் தேடலாம். மேலும் இதில் முக்கியமான வசதி என்னவென்றால் இந்த தளத்தில் நாம் கோப்பின் அளவை வைத்து கோப்புகளை தேடலாம்.




3. SEARCH SHARED : 

மேலே உள்ள தளங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு சேமிப்பு தளங்களில் இருந்து மட்டும் தான் கோப்புகளை தேட இயலும். ஆனால் இந்த தளத்தில் நாம் நமக்கு வேண்டிய சேமிப்பு தளங்களில் இருந்து முடிவுகளை பெறலாம். இந்த தளத்தில் சேமிப்பு தளங்களின் ஒரு பட்டியலே இருக்கிறது அதில் நமக்கு வேண்டியவைகளை தேர்வு செய்து விட்டு அந்த தளங்களில் இருந்து மட்டும்  நாம் முடிவுகளை பெறலாம்.




2.FILE CROP : 

இந்த தளம் பற்றி பலரும் அறிந்திருப்பர். இந்த தளம் மூலம் நாம் கோப்புகளை மிக எளிதாக தேடலாம். மேலும் இந்த தளத்தில் நாம் கோப்பின் அளவை கொடுத்தும் தேடலாம் அது மட்டுமல்ல குறிப்பிட்ட நாட்டில் உள்ள தளங்களில்  உள்ள கோப்புகளை மட்டும் தேடலாம் . இதில் கீழே இருக்கும் சொற்பெட்டியில் கோப்பின் அளவை கொடுக்கலாம் உதாரணத்திற்கு 20KB -100MB என்று கொடுத்தால் இந்த அளவு உள்ள கோப்புகள் மட்டும் பட்டியலிடப்படும்.




1.FILES TUBE : 

இந்த தளம் பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். கூகுளில் சொடுக்கினால் கூட இந்த தளம் தான் முதலில் வரும். இந்த தளம் மூலம் நாம் குறிப்பிட்ட வகையான கோப்புகளை மட்டும் தேடலாம் ( AVI, MKV, MP3, MP4 ). இந்த தளமானது வீடியோ , மென்பொருள்கள் ஆகியவற்றை தேடுவதில் மிகவும் சிறந்தது. இதற்க்கு அந்த தளத்தில் மேலே இருக்கும் இணைப்பை சொடுக்குங்கள்.






இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !




1 comments:

வாஞ்சையுடன் வாஞ்சூர். said...

அன்புடையீர்,

பதிவுக்கு சம்பந்தமில்லாதது என்று தயவு செய்து நீக்கிவிடாதீர்கள்.


அருட்கொடையாம் தொழுகை.

தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


CLICK AND READ.
>>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<

>>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கிய‌த்துவம் ஏன்? <<<


>>>
முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ?
<<<

>>>
க‌ட‌வுளின் உருவங்க‌ள‌ற்ற‌ பள்ளிவாச‌ல்க‌ள் எப்ப‌டி புனித‌மாக‌ இருக்க‌முடியும்?
<<<



வாஞ்சையுடன் வாஞ்சூர்.

Post a Comment