Ads 468x60px

Pages

Sunday, August 21, 2011

மைக்ரோசாப்ட் ஆவணங்களை PDF கோப்பாக மாற்ற ! !

ஒரு கோப்பின் வடிவத்தை மாற்றும் போது நமக்கு பலவகையான பிரச்சனைகள் வரும். அதன் தரம் மற்றும் அதன் அளவு பற்றிய கவலைகள் நமக்கு அடிக்கடி வரும். ஒரு கோப்பின் வடிவத்தை மாற்ற இப்பொழுது பல வகையான கன்வேர்டர் இருக்கிறது. ஆனால் அதில் நாம் வடிவத்தை மாற்றும் போதும் நமக்கு இந்த கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். இந்த சில காரணங்களால் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு மென்பொருளை நாம் தேடிச் செல்ல வேண்டியுள்ளது. இப்பொழுது கணினியின் காலம் வந்துவிட்டது அனைவரும் கணினியில் படிப்பதை விரும்புகின்றனர் இதனால் அனைவரும் மின்புத்தகங்களை படிப்பதற்கும் வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


இதனால் PDF கோப்புகள் பெரும் புகழ்ச்சி பெற்றுஇருக்கிறது. இப்பொழுது மைக்ரோசாப்ட் ஆவணத்தை எப்படி PDF ஆக மாற்றுவது என்பதை பற்றி பார்ப்போம். நாம் அதிகமாக பயன்படுத்தும் கோப்புகளில் மைக்ரோசொப்டின் ஆவணங்கள் மிகவும் முக்கியமானது.

PDF கோப்பினை உருவாக்க :

1. நீங்கள் இந்த வகையான கோப்பை உருவாக்க ஒரு சிறிய மென்பொருள் தேவை இதை மைக்ரோசாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக தருகிறது இதை பதிவிறக்க இங்கே செல்லவும்.

2. இதனை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின் நமக்கு வேலை மிகவும் எளிது.

3. பின்னர் நீங்கள் மாற்ற வேண்டிய ஆவணத்தை சாதரணமாக எம்.எஸ் வோர்டில் திறந்து கொள்ளுங்கள்.

4. அதற்க்கு பிறகு FILE --> SAVE AS -ஐ தேர்வு செய்யுங்கள் அதில் PDF OR XPS என்பதை தேர்வு செய்து அதற்க்கு பெயர் கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்.






அவ்வளவு தான் உங்கள் PDF கோப்பு தயார். நீங்கள் இதில் கோப்பின் அளவை குறைக்க MINIMUM என்ற பொத்தானை அழுத்தி சேமிக்க வேண்டும்.




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !




1 comments:

vidivelli said...

payanilla pathivu,,
vaalththukkal..

Post a Comment