Ads 468x60px

Pages

Tuesday, August 9, 2011

வலைஉலாவி மூலம் கோப்புகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்

கோப்புகளை பகிர்வது என்பது இணயத்தில் அவசியமான ஒன்று. நாம் அனைவரும் இணையத்தில் உலாவும் போது பல வகையான கோப்புகளை பார்வையிடுகிறோம் மற்றும் அதை பதிவிறக்கியும் கொள்கிறோம். அந்த கோப்புகளை நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறோம் ஆனால் இல்லா நேரங்களில் நம் நண்பர்கள் நம்முடன் இருப்பதில்லை அந்த சமயங்களில் அவர்கள் ஒரு கோப்பை கேட்டு நம்மை அணுகும் போது நாம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக கோப்புகளை பகிர்ந்து கொள்கிறோம் . சில கோப்புகளின் அளவு மிகவும் பெரியதாக இருக்கும் அவற்றை நாம் மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துகொள்ள இயலாது.


அந்த மாதிரியான தருணங்களில் நாம் கோப்புகளை பதிவேற்றம் செய்து அதன் முகவரியை நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் அவர்கள் அந்த கோப்புகளை அவர்கள் பதிவிறக்கலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு உள்ள கோப்புகளை மட்டும் தான் நாம் பதிவேற்ற இயலும் அதன் அளவு மீறிவிட்டால் நாம் அதை பதிவேற்ற இயலாது .


ஆனால் நாம் சில கோப்புகளை மிகவும் பத்திரபடுத்தி வைத்திருப்போம் அவற்றை நாம் பதிவேற்றம் செய்வதால் அவற்றை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கி கொள்ளலாம் இவ்வாறு நிறைய பிரச்சனைகள் கோப்புகளை பகிரும்போது நமக்கு ஏற்படும் .


இதற்கு ஒரு அழகான தீர்வை ஒரு இணையதளம் கொண்டுவந்துள்ளது . இதன் மூலம் நாம் பெரிய கோப்புகளை மிக எளிதாக நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

இதை தளத்திற்கு செல்ல : www.filesovermiles.com

இந்த தளம் நேரடியாக கோப்புகளை பகிர்ந்துகொள்ள நமக்கு வழி வகுக்கிறது . இணையம் மூலம் கோப்புகளை வேகமாகவும் , பாதுகாப்பாகவும் பகிர்ந்துகொள்ள இந்த தளம் நமக்கு உதவியாக இருக்கும். மேலும் கோப்புகளை பகிர்வதற்கு நாம் இதில் எந்த கணக்கும் உருவாக்க தேவையில்லை அதுப்போல எந்த மென்பொருளையும் பதிவிறக்கவும் தேவையில்லை.

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் இதில் நம் கோப்புகள் எங்கும் சேமிக்கப் படாது.

இதனை பயன்படுத்த :

1. மேலே உள்ள சுட்டியை அழுத்தி அந்த தளத்திற்கு செல்லவும்.

2. அதில் BROWSE பொத்தானை அழுத்தி எந்த கோப்பை பகிர வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள் .

3. பின்னர் இத தளம் ஒரு முகவரியை ( URL ) கொடுக்கும் அதனை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் உங்கள் நண்பர் இதனை பதிவிறக்கி கொள்ளலாம். உங்கள் கோப்புகள் எங்கும் சேமிக்க படமாட்டாது .

மேலும் இதில் நீங்கள் உங்கள் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். அந்த கடவுச்சொல் உங்கள் நண்பருக்கு தெரிந்தால் மட்டுமே பதிவிறக்க இயலும்.





குறிப்பு : 
உங்கள் நண்பர்கள் கோப்புகளை பதிவிறக்கும் வரை நீங்கள் உங்கள் உலாவியை மூடக் கூடாது. நீங்கள் உங்கள் உலாவியை மூடி விட்டால் உங்கள் நண்பர் கோப்பை பதிவிறக்க இயலாது .




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !



0 comments:

Post a Comment