Ads 468x60px

Pages

Friday, August 12, 2011

பேஸ்புக்கில் புதிய சேவை ஆன்லைன் கிரெடிட்ஸ் ! !


பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது . இணையத்தின் மிக பெரிய சமூக வலைத்தளமாக இது இருந்து வருகிறது . இந்த தளம் மூலம் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை மிக எளிதாக பெருகிக் கொள்ளலாம் . இந்த தளம் தினம் தினம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது இந்த தளம் தன்னை புதுபித்து விட்டது புதிய உரையாடல் பலகை என பலவ்வற்றை இந்த நிறுவனம் புதுபித்து கொண்டு இருக்கிறது. இப்பொழுது புதிதாக வெளிவந்துள்ள கூகுளின் கூகிள் பிளஸ் சேவை இந்த நிறுவனத்தை சற்றே பாதித்து இருக்கிறது என்றே கூறலாம்.





இதனால் இதன் பயனாளர்களை தக்கவைக்க இப்பொழுது இந்த தளம் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் பெயர் " பேஸ்புக் கிரெடிட்ஸ் ". இந்த சேவையின் மூலம் நாம் ஆன்லைனில் சம்பாதிக்கலாம் . இந்த முறை ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப் படுத்தப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனம் இதை இந்தியா விற்கும் அறிமுகபடுத்த உள்ளது .

இதனை இந்திய பயனாளர்கள் விர்சுவல் கரன்சியாக ( VIRTUAL CURRENCY ) பயன்படுத்தி பல்வேறு அப்ளிகேசன்கள் மற்றும் விளையட்டு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .





இந்த புதிய சேவையின் மூலம் 2.5 கோடி பயனாளர்கள் பயன்பெற உள்ளனர். இந்த சேவை பயன்படுத்துவதற்கு எளிதாகவும் அதேசமயம் விரைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது என்றும் . 

ஒரு முறை இதனை பெற்றவுடன் , அவர்கள் பல்வேறு தொழில்நுட்பத்திலான அப்ளிகேசன்கள் மற்றும் பிறவற்றை மிகவும் பாதுகாப்பான முறையில் வாங்குவதற்கு அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று பேஸ்புக் நிறுவனத்தால் அருவிக்கப் பட்டுள்ளது.




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !



1 comments:

Abdul Basith said...

//இதன் பெயர் " பேஸ்புக் கிரெடிட்ஸ் ". இந்த சேவையின் மூலம் நாம் ஆன்லைனில் சம்பாதிக்கலாம்//

இல்லை நண்பா! இதன் மூலம் game developers தான் சம்பாதிப்பார்கள். பேஸ்புக் விளையாட்டுகளில் சில வசதிகளை பெற நாம் பணம் கட்டி தான் பெற முடியும். அதற்கு பயன்படுவது தான் இந்த facebook credits!

Post a Comment