Ads 468x60px

Pages

Sunday, August 21, 2011

மைக்ரோசாப்ட் ஆவணங்களை PDF கோப்பாக மாற்ற ! !

ஒரு கோப்பின் வடிவத்தை மாற்றும் போது நமக்கு பலவகையான பிரச்சனைகள் வரும். அதன் தரம் மற்றும் அதன் அளவு பற்றிய கவலைகள் நமக்கு அடிக்கடி வரும். ஒரு கோப்பின் வடிவத்தை மாற்ற இப்பொழுது பல வகையான கன்வேர்டர் இருக்கிறது. ஆனால் அதில் நாம் வடிவத்தை மாற்றும் போதும் நமக்கு இந்த கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். இந்த சில காரணங்களால் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு மென்பொருளை நாம் தேடிச் செல்ல வேண்டியுள்ளது. இப்பொழுது கணினியின் காலம் வந்துவிட்டது அனைவரும் கணினியில் படிப்பதை விரும்புகின்றனர் இதனால் அனைவரும் மின்புத்தகங்களை படிப்பதற்கும் வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


இதனால் PDF கோப்புகள் பெரும் புகழ்ச்சி பெற்றுஇருக்கிறது. இப்பொழுது மைக்ரோசாப்ட் ஆவணத்தை எப்படி PDF ஆக மாற்றுவது என்பதை பற்றி பார்ப்போம். நாம் அதிகமாக பயன்படுத்தும் கோப்புகளில் மைக்ரோசொப்டின் ஆவணங்கள் மிகவும் முக்கியமானது.

PDF கோப்பினை உருவாக்க :

1. நீங்கள் இந்த வகையான கோப்பை உருவாக்க ஒரு சிறிய மென்பொருள் தேவை இதை மைக்ரோசாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக தருகிறது இதை பதிவிறக்க இங்கே செல்லவும்.

2. இதனை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின் நமக்கு வேலை மிகவும் எளிது.

3. பின்னர் நீங்கள் மாற்ற வேண்டிய ஆவணத்தை சாதரணமாக எம்.எஸ் வோர்டில் திறந்து கொள்ளுங்கள்.

4. அதற்க்கு பிறகு FILE --> SAVE AS -ஐ தேர்வு செய்யுங்கள் அதில் PDF OR XPS என்பதை தேர்வு செய்து அதற்க்கு பெயர் கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்.






அவ்வளவு தான் உங்கள் PDF கோப்பு தயார். நீங்கள் இதில் கோப்பின் அளவை குறைக்க MINIMUM என்ற பொத்தானை அழுத்தி சேமிக்க வேண்டும்.




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !




Friday, August 19, 2011

இந்தியா வல்லரசு தான் - கோபிநாத் ( நீயா - நானா )

விஜய் டிவியின் நீயா நானா கோபிநாத் பற்றி அனைவரும் அறிந்துருப்பர். அருமையான பேச்சாளார். விஜய் டிவி நீயா நீனா நிகழ்ச்சி இவரின் பேச்சால் நல்ல புலமை அடைந்தது அனைவரும் அறிந்தது. யூடுபில் உலாவும் போது இந்த வீடியோவை பார்த்தேன் ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய பேச்சு மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் பேசிய கோபிநாத் இந்தியாவை பற்றியும் இளைஞசர்களை பற்றியும் மிகவும் அழகாக பேசினார். அங்குள்ள நபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்தார். அப்போது ஒரு மாணவன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோபிநாத் இந்தியா வல்லரசு தான் என்று கூறினார். இந்தியாவின் மீதும் இந்தியர்கள் மீதும் அவர் வைத்துள்ள மரியாதையும் நம்பிக்கையும் கோபத்தையும் வெளி காட்டினர்.



அதன் வீடியோ இதோ :

பகுதி 1 :





பகுதி 2 :



பகுதி 3 :




பகுதி 4 :





இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !


Thursday, August 18, 2011

உங்கள் விருப்பங்கள் அடிப்படையில் ஒரேபோன்ற இணையதளங்கள் தேட

நாம் இணையத்தில் உலாவும் போது பல தளங்களுக்கு செல்லுவோம் அதில் சில தளங்களில் உள்ள விஷயங்கள் நமக்கு மிகவும் பிடித்து போனால் நாம் அந்த தளங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்துவிடுவோம். அதைப்போல் இதே மாதிரி மற்ற தளங்கள் உள்ளனவா என்றும் தேட ஆரம்பித்து விடுவோம் அந்த மாதிரியான தருணங்களில் நாம் எப்படி தேடுவது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. நாம் பொதுவாக தளங்களை ஒரு குறிப்பிட்ட குறிச்சொற்கள் மூலம் தான் தேடுவோம். ஒரு தளம் பிடித்து இருந்தால் அந்த தளத்தில் உள்ள குறிசொற்கள் மூலம் அதே மாதரியான தளங்களை தேடலாம்.


அவ்வாறு தேடும் போதும் நாம் எதிர்பார்த்தது கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஒரே போன்ற தளங்களை எவ்வாறு தேடுவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இதற்க்காண சில வழிகள் :

1.SITENEXTDOOR :

இதுவும் கூகுளை போன்ற ஒரு இணையதளம் இதன் மூலம் நாம் ஒரே போன்ற இணையதளத்தை மிக எளிதாக தேடலாம். இதில் நாம் இணையதளத்தின் முகவரியை கொடுத்தும் தேடலாம் அது மட்டுமல்ல இதில் குறிச்சொல் கொடுத்தும் தேடலாம்.






இந்த தளத்திற்கு செல்ல : www.sitenextdoor.com

2. கூகிள் :

தேடுதல் என்று வந்த பிறகு கூகிள் இல்லைனா எப்படி ?. நாம் அதிகமாக பயன்படுத்த கூடிய தேடுபொறி கூகிள் தான். இதன் மூலமாகவும் நாம் ஒரே மாதிரியான தளங்களை தேடலாம் அதற்க்கான குறிச்சொல் இதோ.


related: pctricks.com
related என்று தட்டாசு செய்து அதன் பிறகு உங்களுக்கு தேவையான இணையதளத்தை கொடுத்து தேடுங்கள்நீங்கள் கொடுத்த தளத்தை போன்று உள்ள தளங்கள் பட்டியலிடப் படும். 





இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !





Tuesday, August 16, 2011

உங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FREE E-MAIL ALERTS )

மின்னஞ்சல் என்பது இல்லோருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. நாம் இணயத்தில் எங்கு சென்றாலும் மின்னஞ்சல் இல்லாமல் ஒரு வேலையும் செய்ய இயலாது ஒரு தளத்தில் பயனர் கணக்கு உருவாக்குவதற்கு கூட மின்னஞ்சல் வேண்டும். அவ்வளவு ஏன் ஒரு மின்னஞ்சல் கணக்கு உருவாக்குவதற்கும் மின்னஞ்சல் இப்பொழுது தேவைப் படுகிறது.சரி விசயத்திற்கு வருவோம் . நாம் எப்பொழுதும் இணையத்தில் இருப்பதில்லை அதனால் நமக்கு வரும் மின்னஞ்சல்கள் இல்லாம் நம் கணக்கில் குவிந்துக் கொண்டே போகும் இதனால் நாம் பதில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் சில கடைசியாக போய்விடும்.


இதனால் நாம் அந்த மின்னஞ்சல்களுக்கு தாமதமாக பதில் அனுப்ப வேண்டிய சூழ்நிலை வருகிறது. அது மட்டுமல்ல சில மின்னஞ்சல்களை நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருப்போம். அந்த மின்னஞ்சல் வந்துவிட்டதா வந்துவிட்டதா என்றே நாம் ஒவ்வொரு முறையும் நம் கணக்கில் நாம் சென்று பார்க்க வேண்டியுள்ளது.

இதற்க்கு ஒரு தீர்வை WAY2SMS.COM நமக்கு தருகிறது. இந்த தளம் நமக்கு வரும் மின்னஞ்சல்களை நம் கைபேசிக்கே குறுஞ்செய்தி அனுப்புகிறது.இந்த தளத்தை பற்றி பல நபர்களுக்கு தெரியும். இந்த தகவல் இதனை பற்றி அறியாதவர்களுக்கு.


மின்னஞ்சல்களை குறுஞ்செய்தி மூலம் பெருவதற்க்கு :

மேலே உள்ள சுட்டியை அழுத்தி அதில் பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கைபேசி எண்னை அதில் பதிவு செய்யுங்கள். உங்கள் எண் பதியப்பட்ட உடன் உங்கள் கைபேசிக்கு இந்த தளத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வரும் அதன் மூலம் உங்கள் கைபேசி எண்ணை உறுதிசெய்யுங்கள்.

பின்னர் உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள் அதில் மேலே வலது புறத்தில் MAIL ALERTS என்பதை சொடுக்குங்கள் பின்னர் வரும் பக்கத்தில் ACTIVATE என்ற பொத்தானை அழுத்துங்கள்.

அதன் கீழே நீங்கள் மின்னஞ்சல் எச்சரிக்கை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள். இதன் மூலம் நீங்கள் எந்த மின்னஞ்சல்களில் இருந்தும் மின்னஞ்சல் எச்சரிக்கை பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியது இல்லாம் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பார்வார்ட் செய்யுங்கள்.


உங்கள் மெயில் கணக்கின் SETTINGS பக்கத்திற்கு செல்லுங்கள் அதில் உள்ள FORWARDING என்பதை சொடுக்கி அதில் ADD A FORWARDING ADDRESS என்பதை சொடுக்கி அதில் அந்த தளத்தில் கொடுத்துள்ள முகவரியை கொடுங்கள் அவ்வளவு தான். இதில் ஜிமெயில், யாஹூ மற்றும் மற்ற மின்னஞ்சல்களில் எவ்வாறு பார்வார்ட் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறியிருப்பர்கள். அதைப் போல் செய்தால் போதும் நாம் மிகவும் எளிதாக மின்னஞ்சல் எச்சரிக்கை பெற்றுவிடலாம்.


மேலும் இந்த தளத்தில் இருந்த படியே நாம் நம் ஜிமெயில் மற்றும் யாஹூ மின்னஞ்சல்களை படிக்கலாம். இந்த வசதியை இந்த தளம் நமக்கு அளிக்கிறது. இந்த தளம் மூலம் நாம் இலவசமாக இந்தியா முழுவதும் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்பது குறிப்பிடதக்கது.





இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !



Saturday, August 13, 2011

பதிவிறக்கம் சுட்டிகளை தேட உதவும் தேடுபொறிகள்

இணையத்தில் தேடு பொறி என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதன் மூலம் நாம் இணையத்தில் குவிந்து இருக்கும் தகவல்களை மிகவும் எளிதாக தேடலாம். இணைய உலகில் சாதனை படைத்து கொண்டிருக்கும் கூகிள் புகழ் பெற முக்கியமான காரணம் அதன் தேடுபொறி தான் இது அனைவரும் அறிந்ததே. நாம் இதில் பல வகையான தளங்களை தேடலாம் ஆனால் ஒரு கோப்புடைய பதிவிறக்கம் சுட்டியினை தேடுவது சற்றே சிரமமானது. நாம் ஒரு கோப்பின் பதிவிறக்க சுட்டியினை மட்டும் தேட சில இணையதளங்கள் நமக்கு வழிவகுக்கிறது. அந்த இணையதளங்களை பற்றி நாம் பார்ப்போம்.

இதோ அதற்க்கான சில தளங்கள் :

தளங்களுக்கு செல்ல அதன் கீழே உள்ள படங்களை சொடுக்குங்கள் 

5. SHARE DIGGER : 

இந்த தளத்தில் நாம் நமக்கு தேவையான கோப்புகளை குறிப்பிட்ட சேமிப்பு தளத்தில் இருந்து மட்டும் தேடலாம். இந்த தளமானது கூகுளை பயன்படுத்தி தேடுகிறது.





4. JET DL  :

இந்த தளத்திலும் நாம் குறிப்பிட்ட சேமிப்பு தளத்தில் மட்டும் தேடலாம். மேலும் இதில் முக்கியமான வசதி என்னவென்றால் இந்த தளத்தில் நாம் கோப்பின் அளவை வைத்து கோப்புகளை தேடலாம்.




3. SEARCH SHARED : 

மேலே உள்ள தளங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு சேமிப்பு தளங்களில் இருந்து மட்டும் தான் கோப்புகளை தேட இயலும். ஆனால் இந்த தளத்தில் நாம் நமக்கு வேண்டிய சேமிப்பு தளங்களில் இருந்து முடிவுகளை பெறலாம். இந்த தளத்தில் சேமிப்பு தளங்களின் ஒரு பட்டியலே இருக்கிறது அதில் நமக்கு வேண்டியவைகளை தேர்வு செய்து விட்டு அந்த தளங்களில் இருந்து மட்டும்  நாம் முடிவுகளை பெறலாம்.




2.FILE CROP : 

இந்த தளம் பற்றி பலரும் அறிந்திருப்பர். இந்த தளம் மூலம் நாம் கோப்புகளை மிக எளிதாக தேடலாம். மேலும் இந்த தளத்தில் நாம் கோப்பின் அளவை கொடுத்தும் தேடலாம் அது மட்டுமல்ல குறிப்பிட்ட நாட்டில் உள்ள தளங்களில்  உள்ள கோப்புகளை மட்டும் தேடலாம் . இதில் கீழே இருக்கும் சொற்பெட்டியில் கோப்பின் அளவை கொடுக்கலாம் உதாரணத்திற்கு 20KB -100MB என்று கொடுத்தால் இந்த அளவு உள்ள கோப்புகள் மட்டும் பட்டியலிடப்படும்.




1.FILES TUBE : 

இந்த தளம் பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். கூகுளில் சொடுக்கினால் கூட இந்த தளம் தான் முதலில் வரும். இந்த தளம் மூலம் நாம் குறிப்பிட்ட வகையான கோப்புகளை மட்டும் தேடலாம் ( AVI, MKV, MP3, MP4 ). இந்த தளமானது வீடியோ , மென்பொருள்கள் ஆகியவற்றை தேடுவதில் மிகவும் சிறந்தது. இதற்க்கு அந்த தளத்தில் மேலே இருக்கும் இணைப்பை சொடுக்குங்கள்.






இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !




அஜித்தின் மங்காத்தா ட்ரைலர் மற்றும் பாடல்கள் ( WITH DOWNLOAD LINKS)

தல அஜீத்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா படத்தின் இசை பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்த மாதம் 10-ஆம் தேதி  வெளியாகியது. இந்த படத்தின் பாடல் வெளியிடு மிகவும் எளிமையான முறையில் ரேடியோ மிர்ச்சி அலுவலகத்தில் வைத்து வெளியிடப் பட்டது. பாடலுடன் சேர்த்து படத்தின் டிரெய்லரையும் வெளியிட்டு தல ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.


இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் படம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் இருந்து செய்திகள் வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் முதல் முறையாக ஒரு வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டுமல்ல முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் , வைபவ், பிரேம்ஜி , திரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா மற்றும் லட்சுமிராய் நடித்துள்ளனர்.

இப்படம் அஜித் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று இருக்கிறது. இந்த படத்தில் அஜித்தின்  பைக் சேஸ் மற்றும் கார் சேஸ் ரசிகர்களை கவரும் என்று படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு இசை யுவன்ஷங்கர்ராஜா எப்பொழுதும் போல மிகவும் அருமையான இசையமைத்திருக்கிறார். மங்காத்தா தீம் மியூசிக் மிகவும் அபாரம்.படத்தின்  தயாரிப்பாளர் துறைதயாநிதி.

அஜித்தின் ரசிகனான சிம்பு இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.


இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக :




இந்த படத்தின் ட்ரைலரை பதிவிறக்க : சுட்டி


இந்த படத்தின் பாடலை பதிவிறக்க : சுட்டி







Friday, August 12, 2011

பேஸ்புக்கில் புதிய சேவை ஆன்லைன் கிரெடிட்ஸ் ! !


பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது . இணையத்தின் மிக பெரிய சமூக வலைத்தளமாக இது இருந்து வருகிறது . இந்த தளம் மூலம் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை மிக எளிதாக பெருகிக் கொள்ளலாம் . இந்த தளம் தினம் தினம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது இந்த தளம் தன்னை புதுபித்து விட்டது புதிய உரையாடல் பலகை என பலவ்வற்றை இந்த நிறுவனம் புதுபித்து கொண்டு இருக்கிறது. இப்பொழுது புதிதாக வெளிவந்துள்ள கூகுளின் கூகிள் பிளஸ் சேவை இந்த நிறுவனத்தை சற்றே பாதித்து இருக்கிறது என்றே கூறலாம்.





இதனால் இதன் பயனாளர்களை தக்கவைக்க இப்பொழுது இந்த தளம் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் பெயர் " பேஸ்புக் கிரெடிட்ஸ் ". இந்த சேவையின் மூலம் நாம் ஆன்லைனில் சம்பாதிக்கலாம் . இந்த முறை ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப் படுத்தப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனம் இதை இந்தியா விற்கும் அறிமுகபடுத்த உள்ளது .

இதனை இந்திய பயனாளர்கள் விர்சுவல் கரன்சியாக ( VIRTUAL CURRENCY ) பயன்படுத்தி பல்வேறு அப்ளிகேசன்கள் மற்றும் விளையட்டு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .





இந்த புதிய சேவையின் மூலம் 2.5 கோடி பயனாளர்கள் பயன்பெற உள்ளனர். இந்த சேவை பயன்படுத்துவதற்கு எளிதாகவும் அதேசமயம் விரைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது என்றும் . 

ஒரு முறை இதனை பெற்றவுடன் , அவர்கள் பல்வேறு தொழில்நுட்பத்திலான அப்ளிகேசன்கள் மற்றும் பிறவற்றை மிகவும் பாதுகாப்பான முறையில் வாங்குவதற்கு அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று பேஸ்புக் நிறுவனத்தால் அருவிக்கப் பட்டுள்ளது.




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !



Wednesday, August 10, 2011

ஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ ! ! !

இப்பொழுது கணினி என்பது இந்த உலகில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது நாம் எங்கு திரும்பினாலும் சரி நமக்கு முன் கணினி தான் நிற்கிறது. அந்த அளவுக்கு இந்த உலகம் கணினியை நேசிக்கின்றது. கணினி இயங்குவதற்கு மென்பொருள் மிகவும் அவசியமான ஒன்று . இப்பொழுது மென்பொருள்கள் ஏராளமாக உருவாக்க படுகின்றன. இணையத்தில் ஒரு குறிச்சொல் கொடுத்து தேடினால் ஏராளமான மென்பொருள்கள் குவிகின்றன ஒரே செயலுக்கு பல வகையான மென்பொருள்கள் வந்துவிட்டன.


நாம் நம் கணினிக்கு தேவையான ஒவ்வொரு மென்பொருளையும் இணையத்தில் தேடி தேடி நிறுவிக்கொண்டு இருக்கிறோம்.ஒவ்வொரு மென்பொருளையும் பதிவிறக்குவதர்க்கு ஒவ்வொரு வலை பக்கத்திற்கு செல்லுவோம் அதில் அதை பதிவிறக்கியும் கொள்ளுவோம்.

இதனால் நாம் அதிகமான நேரத்தை இணையத்தில் செலவிட வேண்டியுள்ளது.


அதற்கான் தீர்வை ஒரு இணயதளம் நமக்கு தருகிறது . ஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து வகையான மென்பொருளையும் நிறுவுவதற்கு இந்த தளம் உதவுகிறது. இந்த தளம் கணினிக்கு தேவையான மென்பொருள்களை ஒரு பட்டியலே போட்டு வைத்திருக்கிறது.


இந்த தளத்தில் கணினிக்கு மிகவும் அவசியமான VLC , WINAMP  , JET AUDIO போன்ற வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர்களும் , FIREFOX,CHROME போன்ற பல உலாவிகளும் ,  GTALK , SKYPE போன்ற உரையாடல் மென்பொருள்களும்  மற்றும் இணையத்திற்கு தேவையான பிளாஷ் பிளேயர் , சில்வர் லைட் போன்ற மென்பொருள்களும் இந்த தளத்தில் இருக்கிறது. மேலும் இந்த தளத்தில் ஆவணகளுக்கு தேவையான மென்பொருள்களும் ஒளிபடங்களுக்கு தேவையான மென்பொருள்களும் நிறைய உள்ளது.







இந்த தளத்திற்கு செல்ல : WWW.NINITE.COM


நீங்கள் செய்ய வேண்டியது :

1. மேலே உள்ள தளத்திற்கு செல்லவும்.

2. பின்னர் அதில் உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்வு செய்யுங்கள் .

3. பிறகு கீழே உள்ள GET INSTALLER என்ற பொத்தானை அழுத்தவும்.

நீங்கள் அந்த பொத்தானை அழுத்திய உடன் அந்த தளம் ஒரு சாதாரண NINITE.EXE கோப்பை பதிவிறக்கம் செய்யும். அந்த கோப்பை பதிவிறக்கிக் கொண்டு அதை திறக்கவும். அவ்வளவு தான் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் ஒரே சொடுக்கில் நிறுவப் பட்டுவிடும் .



இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் அனைவரும் பயனடைவார்கள் ! ! !


Tuesday, August 9, 2011

வலைஉலாவி மூலம் கோப்புகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்

கோப்புகளை பகிர்வது என்பது இணயத்தில் அவசியமான ஒன்று. நாம் அனைவரும் இணையத்தில் உலாவும் போது பல வகையான கோப்புகளை பார்வையிடுகிறோம் மற்றும் அதை பதிவிறக்கியும் கொள்கிறோம். அந்த கோப்புகளை நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறோம் ஆனால் இல்லா நேரங்களில் நம் நண்பர்கள் நம்முடன் இருப்பதில்லை அந்த சமயங்களில் அவர்கள் ஒரு கோப்பை கேட்டு நம்மை அணுகும் போது நாம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக கோப்புகளை பகிர்ந்து கொள்கிறோம் . சில கோப்புகளின் அளவு மிகவும் பெரியதாக இருக்கும் அவற்றை நாம் மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துகொள்ள இயலாது.


அந்த மாதிரியான தருணங்களில் நாம் கோப்புகளை பதிவேற்றம் செய்து அதன் முகவரியை நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் அவர்கள் அந்த கோப்புகளை அவர்கள் பதிவிறக்கலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு உள்ள கோப்புகளை மட்டும் தான் நாம் பதிவேற்ற இயலும் அதன் அளவு மீறிவிட்டால் நாம் அதை பதிவேற்ற இயலாது .


ஆனால் நாம் சில கோப்புகளை மிகவும் பத்திரபடுத்தி வைத்திருப்போம் அவற்றை நாம் பதிவேற்றம் செய்வதால் அவற்றை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கி கொள்ளலாம் இவ்வாறு நிறைய பிரச்சனைகள் கோப்புகளை பகிரும்போது நமக்கு ஏற்படும் .


இதற்கு ஒரு அழகான தீர்வை ஒரு இணையதளம் கொண்டுவந்துள்ளது . இதன் மூலம் நாம் பெரிய கோப்புகளை மிக எளிதாக நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

இதை தளத்திற்கு செல்ல : www.filesovermiles.com

இந்த தளம் நேரடியாக கோப்புகளை பகிர்ந்துகொள்ள நமக்கு வழி வகுக்கிறது . இணையம் மூலம் கோப்புகளை வேகமாகவும் , பாதுகாப்பாகவும் பகிர்ந்துகொள்ள இந்த தளம் நமக்கு உதவியாக இருக்கும். மேலும் கோப்புகளை பகிர்வதற்கு நாம் இதில் எந்த கணக்கும் உருவாக்க தேவையில்லை அதுப்போல எந்த மென்பொருளையும் பதிவிறக்கவும் தேவையில்லை.

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் இதில் நம் கோப்புகள் எங்கும் சேமிக்கப் படாது.

இதனை பயன்படுத்த :

1. மேலே உள்ள சுட்டியை அழுத்தி அந்த தளத்திற்கு செல்லவும்.

2. அதில் BROWSE பொத்தானை அழுத்தி எந்த கோப்பை பகிர வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள் .

3. பின்னர் இத தளம் ஒரு முகவரியை ( URL ) கொடுக்கும் அதனை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் உங்கள் நண்பர் இதனை பதிவிறக்கி கொள்ளலாம். உங்கள் கோப்புகள் எங்கும் சேமிக்க படமாட்டாது .

மேலும் இதில் நீங்கள் உங்கள் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். அந்த கடவுச்சொல் உங்கள் நண்பருக்கு தெரிந்தால் மட்டுமே பதிவிறக்க இயலும்.





குறிப்பு : 
உங்கள் நண்பர்கள் கோப்புகளை பதிவிறக்கும் வரை நீங்கள் உங்கள் உலாவியை மூடக் கூடாது. நீங்கள் உங்கள் உலாவியை மூடி விட்டால் உங்கள் நண்பர் கோப்பை பதிவிறக்க இயலாது .




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !



Monday, August 8, 2011

ஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி - டாக் இயக்க

இணையத்தின் ஜாம்பவானாக இருப்பது கூகிள் தான் அந்த அளவுக்கு இணையத்தில் எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் சேவை நமக்கு பயனளிக்கிறது. இப்பொழுது இது வெளியிட்டு உள்ள கூகிள் + சேவை இணையத்தில் பல சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறது. அதைப்போல் இந்த நிறுவனத்தின் ஜி-டாக் சேவை பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது. இந்த மென்பொருளானது ஜி மெயில் இடைமுகம் மூலம் நாம் ஜி-மெயில் பயனர்களிடம் அரட்டையடிக்க உதவுகிறது.


நம்மில் பலர் இந்த மென்பொருளை உபயோக படுத்துகிறோம். நம் வீட்டில் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். நம் வீட்டில் வேறு யாராவது இதனை பயன்படுத்தி கொண்டு இருந்தால் நாம் நமக்கு வரும் மின்னஞ்சல்களை நாம் கண்டு அறிய இயலாது இதனால் நாம் உடனடியாக பதில் அனுப்பவேண்டிய மின்னஞ்சல்களுக்கு தாமதமாக அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரலாம்.

இதற்காக ஒரு சிறிய நுணுக்கம் இதன் மூலம் நாம் ஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி-டாக்கை திறக்கலாம். இதற்க்கு எந்த விதமான மென்பொருளும் அவசியம் இல்லை.

இதோஅதற்க்கான நுணுக்கம் :

1. முதலில் START--> ALL PROGRAMS-->GTALK -க்கு செல்லவும்

2. பின்னர் G-TALK-ஐ வலது கிளிக் செய்து PROPERTIES என்பதை தேர்வு செய்யவும் .

3.அதில் TARGET என்ற சொற்பெட்டியில் C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu என்று இருக்கும் அதில் startmenu என்பதை நீக்கிவிட்டு nomutex என்று தட்டாசு செய்து விட்டு OK பொத்தானை அழுத்தவும்.






அவ்வளவு தான் ஜி-டாக்கை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதை நீங்கள் எவ்வளவு முறை வேண்டுமானாலும் திறக்கலாம்.இதனை திறக்க START-->ALL PROGRAMS--> GTALK என்பதை சொடுக்குங்கள்.  உங்கள் வீட்டில் உள்ள இல்லா நபர்களுக்கும் ஒரு ஜி-டாக் திறந்து கொள்ளலாம்.




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !